தீபாவளி ஆஃபர்.. கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி, ஜொமாட்டோ..!

ஸ்விக்கியும் கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தீபாவளி ஆஃபர்.. கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி, ஜொமாட்டோ..!
Published on

தீபாவளி பண்டிகை விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தி இருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ஸ்விக்கி நிறுவனம் தனது உணவு டெலிவரி சேவைக்கான பிளாட்ஃபார்ம் கட்டணம் அக்டோபர் 23 ஆம் தேதி மட்டும் ரூ. 10 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஜொமாட்டோ நிறுவனமும் இதே போன்ற கட்டண முறையை அறிவித்த நிலையில், ஸ்விக்கியும் கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி லாபம் ஈட்டும் நோக்கில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை விதித்துள்ளன. இந்த அறிவிப்பு பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும், பலர் இது குறித்து சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com