அசாமில் விபத்துக்குள்ளான SU-30 MKI ரக போர் விமானம்- இருவர் உயிரிழப்பு

போர் விமானம் நேற்று இரவு சுமார் 7.42 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து மறைந்தது.விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்து வந்தனர்.
அசாமில் விபத்துக்குள்ளான SU-30 MKI ரக போர் விமானம்- இருவர் உயிரிழப்பு
Published on

இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போர் விமானம் காணாமல் போனதாக நேற்று அதிர்ச்சி தகவல் வெளியானது.

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக போர் விமானம் நேற்று இரவு சுமார் 7.42 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து மறைந்ததாக கூறப்பட்டது.

விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்து வந்த நிலையில், இந்திய விமானப்படையின் எஸ்யூ-30 எம்கேஐ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் ஸ்குவாட்ரான் தலைவர் அனுஜ், லெப்டினன்ட் பர்வேஷ் துராக்கர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com