மாணவர் தற்கொலை விவகாரம்: மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் சஸ்பெண்டு

ஷாகில் இறப்பதற்கு முன்பு ஜாதி ரீதியில் பாரபட்சத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
IIT
Published on
Summary

ஐ.ஐ.டி. பேராசிரியர் சூர்ய நாராயணா டுல்லா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மும்பை ஐ.ஐ.டி. மாணவர் ஷாகில் ரவீந்திரா வகோடே தேர்வில் சாட் ஜிபிடி பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டறியப்பட்டது. தேர்வு கண்காணிப்பாளரிடம் அவர் சிக்கினார். இதைத் தொடர்ந்து மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வு மையத்தில் பிடிபட்டபோது ஷாகில் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவருக்கு துறை தலைவர் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டதாக ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஷாகில் இறப்பதற்கு முன்பு ஜாதி ரீதியில் பாரபட்சத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டினர். இதன் அடிப்படையில் ஐ.ஐ.டி. பேராசிரியர் சூர்ய நாராயணா டுல்லா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பேராசிரியரை ஐ.ஐ.டி. நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. விசாரணைக்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை ஐ.ஐ.டி. இயக்குனர் ஷரிஷ் கேடரே தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com