நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆப்சென்ட்!

முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆப்சென்ட்!
Published on

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு 10 நாட்கள் முதலீட்டுப் பயணம் மேற்கொள்வதால் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இல்லாததால், அம்மாநில துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா அல்லது மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நாளை (ஆகஸ்ட் 20) தென்மண்டல கவுன்சில் குழு மாநாடு நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com