தாயின் 18 ஆண்டு கால கனவை நிறைவேற்றிய மகன் - 10க்கு 10 வீட்டில் இருந்து சொந்த வீடு வாங்கிய இளைஞர்

ஹரிஷ் தாக்கூர் என்ற இளைஞர், தான் சிறுவனாக இருந்தபோது தனது குடும்பத்தினருடன் 10க்கு 10 அடி கொண்ட ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
Son Fulfils 18-Year Promise
Published on: 
Summary

ராப் பாடகர் ஒருவர் தான் சிறுவனாக இருக்கு போது, தனது பெற்றோரிடம் சொந்தமாக வீடு வாங்கி தருவதாக கொடுத்த வாக்குறுதியை, தற்போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றியுள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

குடும்பத்தின் ஏழ்மை

ராப் பாடகரான ஹரிஷ் தாக்கூர், தான் சிறுவனாக இருந்தபோது பெற்றோர்கள் மற்றும் நான்கு சகோதரர்களுடன் 10க்கு 10 அடி கொண்ட ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது அவர் தனது அம்மாவிடம், தான் பெரியவனாக வளர்ந்ததும், ஒரு பெரிய வீட்டில் உங்களை குடியிருக்க வைப்பேன் என்று கூறியுள்ளார்.

புதிய வீடு

இதற்கிடையில் தனது வாழ்க்கையில் கடினமாக உழைத்த அவர், சிறிது சிறிதாக பணத்தை சேமிக்க தொடங்கியுள்ளார். இதையடுத்து தான் சேமித்து வைத்த பணத்தில் இருந்து சுமார் 18 ஆண்டுகள் கழித்து அவர், புதிதாக ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பெற்றோர்களை தனது புதிய வீட்டிற்கு அழைத்து வந்த அந்த இளைஞர், வீட்டின் சாவியை தனது பெற்றோர்களிடம் கொடுத்துள்ளார். இதனை அவர் ஒரு வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடியோ பதிவு

மேலும் அவர் அந்த வீடியோவில், தான் சிறுவனாக இருந்தபோது தங்களுக்கு தேவையானது அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்வதற்கு தனது தந்தை கடினமாக உழைத்ததையும் நினைவு கூர்ந்தார்.

தனது தந்தையால் கடைசி வரை ஒரு வீட்டை வாங்க முடியாமல் போனதையும், ஹரிஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தான் புதிதாக வாங்கிய வீட்டின் பெயர் பலகையில், தனது பெற்றோர்களின் பெயர்களை பார்ப்பது நம்ப முடியாத ஒன்றாக உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

மகிழ்ச்சியான நாள்

மேலும் அவர் அந்த பதிவின் இறுதியில், ஒவ்வொரு மகனும் இந்த விதமான மகிழ்ச்சியான நாளை, நிச்சயமாக ஒரு நாள் உங்கள் வாழ்க்கையில் பார்ப்பீர்கள் என்று தான் நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com