திரிபுராவில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கடத்தல்காரர்கள் கொடூரத் தாக்குதல் –முதலமைச்சர் எச்சரிக்கை!

முதல்வர் கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கைக்கு உத்தரவு - எல்லையில் கூடுதல் BSF வீரர்கள் தீவிர குவிப்பு.
BSF Smugglers Attack
Published on: 
Summary

திரிபுரா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் மீது கடத்தல் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்குத் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

எல்லையில் நடந்த பயங்கரத் தாக்குதல்

திரிபுராவின் போக்ஸாநகர் எல்லைக்கு உட்பட்ட ஆஷாபாரி என்ற பகுதியில், திங்கட்கிழமை காலை BSF வீரர்கள் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஒரு கும்பல், திடீரென BSF வீரர்கள் 3 பேரைச் சூழ்ந்துகொண்டு கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.

இத்துடன் நிறுத்தாமல், காயமடைந்த வீரர்களிடம் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிக்கவும் அந்த கும்பல் முயன்றுள்ளது. மேலும், அங்கிருந்த அரசு வாகனத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தால் அந்த எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

முதல்வர் மாணிக் சாஹா கடும் கண்டனம்

இந்தச் சம்பவம் குறித்து திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஆஷாபாரியில் நமது துணிச்சலான பி.எஸ்.எஃப் வீரர்கள் மீது சமூக விரோதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நமது பாதுகாப்புப் படையினருக்கு எதிரான இத்தகைய வன்முறைச் செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

நாட்டின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் வீரர்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் கடுமையான கவலைக்குரிய விஷயமாகும். இது சட்டப்படி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை பிடிக்க உத்தரவு

பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதல்வர், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களை உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது மிக கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது அந்த எல்லைப் பகுதியில் கூடுதல் BSF வீரர்கள் குவிக்கப்பட்டு, தப்பியோடிய கடத்தல் கும்பலைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

X