சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்

சீதாராம் யெச்சூரி சுவாச பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்
Published on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com