

ரமேஷின் தங்கை தனலட்சுமி ராக்கி கயிறு கட்டுவதற்கு முன்பே இறந்து விட்டாயா அண்ணா என்று கதறி அழுதபடி அவரது கையில் ராக்கி கயிறு கட்டினார்.
தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் குரவியை சேர்ந்தவர் வீரண்ணா. இவரது மகன் ரமேஷ் (வயது 36). வீரண்ணா கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார்.
இந்நிலையில் வீரண்ணாவின் மகன் ரமேஷும் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். நேற்று ரமேஷின் இறுதி சடங்கிற்காக அவரது உடல் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த ரமேஷின் தங்கை தனலட்சுமி ராக்கி கயிறு கட்டுவதற்கு முன்பே இறந்து விட்டாயா அண்ணா என்று கதறி அழுதபடி அவரது கையில் ராக்கி கயிறு கட்டினார்.
இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. 10 நாட்களுக்குள் தந்தையும் மகனும் அடுத்தடுத்து இறந்து போனதால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.