பிரபல பாடகிக்கு வந்த சோதனை.. ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுகோள் என்ன தெரியுமா?

பிரபல பின்னணி பாடகி அல்கா யாக்னிக் பல மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். உங்களுடைய ஹெட்போன்களில் இசையை அதிக சத்தத்துடன் வைத்து கேட்பதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருங்கள்.
பிரபல பாடகிக்கு வந்த சோதனை.. ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுகோள் என்ன தெரியுமா?
Published on

புதுடெல்லி:

பிரபல பின்னணி பாடகி அல்கா யாக்னிக். 58 வயதான இவர் பல மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 2 தேசிய விருதுகளை வென்றுள்ள இவர், தமிழில் 'ஓரம்போ' திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 'இது என்ன மாயம்' என்ற பாடலை பாடியுள்ளார்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'நான் சில வாரங்களுக்கு முன்பு விமானத்தில் இருந்து வெளியேறும்போது திடீரென என்னால் எதையும் கேட்க முடியவில்லை. எனக்கு வைரஸ் தாக்குதலால் காதுகளில் மிகவும் அரிதான உணர்திறன் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். சிகிச்சை பெற்று வருகிறேன். உங்களுடைய ஹெட்போன்களில் இசையை அதிக சத்தத்துடன் வைத்து கேட்பதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருங்கள்' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com