சக ஊழியரின் 2 வயது மகனுக்கு வித்யாரம்பம் நடத்திய சசிதரூர்

திருவனந்தபுரத்தை சேர்ந்த தனது சக ஊழியரின் மகனுக்கு ஒரு சடங்கு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். பொதுவாக விஜயதசமி அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.
சக ஊழியரின் 2 வயது மகனுக்கு வித்யாரம்பம் நடத்திய சசிதரூர்
Published on

திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் தனது சக ஊழியரான பிரகாஷ் என்பவரின் 2½ வயது மகனுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியான வித்யாரம்பம் நடத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த தனது சக ஊழியரின் மகனுக்கு ஒரு சடங்கு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். வித்யாரம்பம் சடங்கின்படி ஒரு குழந்தை தனது முதல் எழுத்துக்களை ஒரு தட்டில் அரிசியை நிரப்பி அதில் எழுத தொடங்கும். ஆசிரியர்கள், அறிஞர்கள் போன்றோர் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார்கள்.

பொதுவாக விஜயதசமி அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இருப்பினும் ஒவ்வொரு நாளும் கற்றல் நடத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நடத்தியதாக சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோவில் சசிதரூரின் மடியில் அமர்ந்திருக்கும் சிறுவன் அனந்த பத்மநாபனுக்கு அவரது விரலால் ஓம் ஹரி ஸ்ரீ என்பதை எழுத வைப்பதுபோல் காட்சி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com