

டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயிலில் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயிலில் இந்த மிரட்டல் வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்தப் பள்ளிகளுக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதுவரை பள்ளிகளில் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கண் டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் பள்ளிகளில் வழக்கமான நடைமுறைகள் பாதிக்கப்பட்டன.