தெலுங்கானாவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த காங்கிரஸ் அரசு தயக்கம்

பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஊரக பகுதிகளுக்கு தனி அலுவலர்களை அரசு நியமனம் செய்துள்ளது.
தெலுங்கானாவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த காங்கிரஸ் அரசு தயக்கம்
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

அதேபோல மண்டல வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஜில்லா அளவிலான வார்டு உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் கடந்த 3-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால் தெலுங்கானாவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மொத்தமுள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதை பின்னடைவாக காங்கிரஸ் அரசு பார்க்கிறது.

இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த காங்கிரஸ் தயக்கம் காட்டி வருகிறது. ஊரக பகுதிகளுக்கு தனி அலுவலர்களை அரசு நியமனம் செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com