

அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி ஆகியவை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
கடந்த வெள்ளக்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 74781.76 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. சனி, ஞாயிறு விடுமுறை. நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 75,369.63 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இறுதியாக 74,003.82 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது வெள்ளிக்கிழமை வர்த்தக நிறைவைவிட 777.94 புள்ளிகள் சரிவாகும். 1.04 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் 1725.92 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. இது 2.28 சதவீதம் ஆகும்.
மும்பை பங்குச் சந்தை போன்று, இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டியும் கடும் சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி 23398.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று 23576.15 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது, என்றாலு் 279.50 புள்ளிகள் சரிந்து 23,118.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது 1.19 சதவீதம் குறைவாகும். கடந்த 5 நாட்களில் 391.40 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன.
HDFC வங்கி, டாடா ஸ்டீல், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி பவர், கோடன் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கனரா வங்கி, இந்தியன் ஆயில் கார்பரேசன், ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.