எப்படி வந்து சிக்கியிருக்கேன் பாருங்க.. விண்ட் ஸ்கிரீனில் எசகுபிசகாக மாட்டிய ஒட்டகம் - வைரல் வீடியோ

காரின் விண்ட்ஸ்க்ரீன் உடைந்த நிலையில் ஒட்டகம் எசகுபிசகாக அதில் மாட்டிக்கொண்டுள்ளது. இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு அபத்தமானதாக ஒரு நிலையில் சிக்கிக்கொண்டு ஒட்டகம் கதறும் வீடியோ காண்போரை கலங்கடித்து வருகிறது.
எப்படி வந்து சிக்கியிருக்கேன் பாருங்க.. விண்ட் ஸ்கிரீனில் எசகுபிசகாக மாட்டிய ஒட்டகம் - வைரல் வீடியோ
Published on

விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் ராஜஸ்தானில் காரின் விண்ட்ஸகிரீனில் ஒட்டகம் ஒன்று மாட்டிக்கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஹனுமான்கர் மாவட்டத்தில், நேற்று முன் தினம் இரவு நேரத்தில் நடந்த இந்த சமபவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஒட்டகம் காரின் முன்புற கண்ணாடியான விண்ட்ஸகிரீனில் உட்கார்ந்த நிலையில் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் வலியில் துடிப்பது பதிவாகியுள்ளது. நொஹார் நோக்கி இரவு நேரத்தில் காரில் சென்றுகொண்டிருந்த நபர் ஒட்டகம் வழியில் இருப்பதை கவனிக்காமல் அதன் மீது மோதியுள்ளார்.

இதனால் காரின் விண்ட்ஸ்க்ரீன் உடைந்த நிலையில் ஒட்டகம் எசகுபிசகாக அதில் மாட்டிக்கொண்டுள்ளது.இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். வெகு நேரமாக வலியில் துடித்த ஒட்டகம் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு அபத்தமானதாக ஒரு நிலையில் சிக்கிக்கொண்டு ஒட்டகம் கதறும் வீடியோ காண்போரை கலங்கடித்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com