ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள்- வீடியோ வைரல்

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அலறிய பள்ளி மாணவிகளை உடனடியாக உதவ முன்வந்தனர்.மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள்- வீடியோ வைரல்
Published on

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மஞ்சல்பூரில் இந்த விபத்து சம்பவமானது ஏற்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவில் ஒரு வெள்ளை நிற பள்ளி வேனானது ஒரு குறுகிய தெருவில் ரிவர்ஸ் சென்று உடனடியாக அதிக வேகத்தில் அந்த தெருவை நோக்கி செல்கிறது. அதில் பின்பக்கமாக இரண்டு மாணவிகள் தங்கள் பள்ளி பேக்குடன் குச்சலிட்ட படி கீழே விழுகிறார்கள். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அலறிய பள்ளி மாணவிகளை உடனடியாக உதவ முன்வந்தனர்.

இரண்டு மாணவிகளும் வலியுடன் இருப்பதை இந்த வீடியோவில் காணலாம். உடனே அருகில் மாணவில் ஒருவரை தூக்கி அருகில் உள்ள வீட்டில் அமர வைக்கிறார்.

இச்சம்பவம் சமூக ஊடகங்களில் அனைவரின் மத்தியிலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பயனர்கள் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.

ஓட்டுநரின் கவனக்குறைவால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேன் கதவை சரியாக மூடாததால், மாணவிகள் வெளியே விழுந்துள்ளனர்.

மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தைத் தொடர்ந்து, மாணவர் பாதுகாப்பில் குஜராத் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com