ஜி20 மாநாடு- டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.ஜி20 மாநாடு முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாடு- டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Published on

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது.

இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில், ஜி20 மாநாட்டைத் தொடர்ந்து டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, டெல்லி முழுவதும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செப்டம்பர் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com