போராட்டங்களுக்கு ஆதரவான, எதிரான மனுக்கள் மீது 27-ந்தேதி விசாரணை- உச்சநீதிமன்றம்

டெல்லியில் போராட்ட நடத்தவும், அதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றம் ஏராளமான மனுக்கள் தாக்கல்.
supreme court
உச்சநீதிமன்றம்
Published on: 

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான இடமாக இருந்து வருகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்தது. அதன்பின் ஜந்தர் மந்தரில் போராடுவதற்கு அனுமதி கிடையாது என்று டெல்லி போலீசார் அறிவித்தனர்.

காங்கிரஸ் சார்பில் ராம்லீலா மைதானத்தில் பேரணி

அதன்பின் கடந்த 1-ந்தேதி காங்கிரஸ் சார்பில் ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதற்கு சி.ஜே.பி. உள்ளிட்ட அமைப்புகள், பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்தன.

இதற்கிடையே தீபாவளி நெருங்குவதால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று வர்த்தக அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் எழுதியது. ஆனாலும் பேரணி ஒத்திவைக்கப்படவில்லை.

அடிக்கடி போராட்டம் நடத்தப்படுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இரண்டு தரப்பிலும் உச்சநீதிமன்றம் மனு

இதனால் உச்சநீதிமன்றம் போராட்டம் நடத்துவதற்கும், போராட்டத்திற்கு எதிராகவும் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.

இந்த நிலையில் அனைத்து மனுக்களுக்கான விசாரணை தேதி அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறியதாவது:-

* டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் போராட்டங்களால் வணிகம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்த போராட்டங்களை நிறுத்தக் கோரி வணிகர் அமைப்புகள் தாக்கல் செய்த திருத்தப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.

* இது தொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி (AAP), ஏஐஎஸ்ஏ (AISA) உள்ளிட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.

நவம்பர் 27-ல் விசாரணை

* போராட்டங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது நவம்பர் 27-ம் தேதி விசாரணை நடைபெறும்.

* போராட்டம் நடத்துவதற்கான உரிமை மற்றும் வணிகம் நடத்துவதற்கான உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளுக்கு இடையே சமநிலையைப் பேண வேண்டியது அவசியம்.

* டெல்லியிலும் பிற இடங்களிலும் சமீபகாலமாக நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பான பல்வேறு வகை வழக்குகளை விசாரிப்பதற்கான தேதிகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

X