சபரிமலை கோவிலில் மாயமான தங்கக் கிரீடம் ஆரன்முலாவில் உள்ளதா? - தேவசம் வாரிய தலைவர் விளக்கம்

திருவாபரணம் ஆணையருடன் விவாதித்த பின்னரே இறுதி விளக்கம் அளிக்க முடியும்.
திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர்
Published on
Summary

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க கிரீடம் மாயமானது தொடர்பாக, திருவாபரணம் ஆணையருடன் விவாதித்த பின்னரே இறுதி விளக்கம் அளிக்க முடியும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் கூறினார்.

சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானம் பாதுகாப்பு அறையில் இருந்த 56 பவுன் தங்க கிரீடம் மாயமானதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் கே. ஜெயக்குமார் கூறுகையில், மாயமான கிரீடம் சபரிமலையில் இல்லை என்று கூறப்படுகிறது.

அதேநேரம், அது ஆரன்முலாவில் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இதுகுறித்து திருவாபரணம் ஆணையருடன் விவாதித்த பின்னரே இறுதி விளக்கம் அளிக்க முடியும்.

அந்த கிரீடம் ஆரன்முலாவில் இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் கிடைத்துள்ளது. அங்கு ஆய்வு செய்த பிறகே தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அது 2 இடங்களிலும் இல்லை என்றால், இது ஒரு பெரும் ஊழலாகக் கருதப்பட வேண்டும்,’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com