சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கு: TDB முன்னாள் தலைவருக்கு ஜாமின் மறுப்பு

கடந்த மாதம் 23-ந்தேதி TDB முன்னாள் தலைவர் பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.
சபரிமலை
சபரிமலை
Published on: 
Summary

சபரிமலை கோவில் துவார பாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டதில் தங்கம் மாயமான வழக்கில் கடந்த ஜூலை மாதம் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது. அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு-வும் கைது செய்யப்பட்டார்.

TDB முன்னாள் தலைவர்

இவ்வழக்கு விசாரணை கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 17-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் திருவாங்கூர் தேவஸ்தம் போர்டு முன்னாள் தலைவர் பி.எஸ். பிரசாந்த் ஆவார். 18-வது குற்றவாளியாக அஜித் குமார் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இருவரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது TDB-யின் முன்னாள் உறுப்பினர் அஜித்குமாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால் TDB முன்னாள் தலைவர் வி.பிஎஸ். பிரசாந்திற்கு நீதுிபதி மோகித் ஜாமின் வழங்க மறுத்துவிட்டார். அஜித்குமாருக்க உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கப்படடுள்ளது.

பிரசாந்த் 2023ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவராக இருந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (மார்க்சிஸ்ட்) இணைவதற்கு முன்பு அவர் ஒரு காங்கிரஸ் தலைவராக இருந்தார்.

ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைக்கு தகடு பதிக்க கடந்த 2024-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கும் முடிவை எடுத்த குழுவில் பிரசாந்த், அஜித்குமார் மற்றும் ஜி. சுந்தரேசன் ஆகியோர் இருந்தனர். இருவரும் கடந்த மாதம் 23-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com