

கிராமப்புற அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) மற்றும் அதன் நிறுவனர் அபிஜித் திப்கே அறிவித்துள்ள தேசிய அளவிலான பிரச்சாரத்தின் முக்கியச் செய்திகள் தமிழில் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:
நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள், மாணவர்களை ஒன்றுதிரட்டி கரப்பான் பூச்சி கட்சி ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய போராட்டம் மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் வெற்றி பெற்றது.
இதைதொர்ந்து சிஜேபியின் அடுத்தகட்ட நகர்வு என்ன என எதிர்பார்க்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சத்திரபதி சாம்பாஜி நகரில் தன் வீட்டில் இருந்தபடி சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அமைப்பின் அடுத்தகட்ட செயல்திட்டத்தை தீட்டி வருகிறார்.
ஜார்கண்டில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நேற்று சட்டமன்றம் நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் அடக்குமுறையில் ஈடுபடத்தை அவர் கண்டித்துள்ளார்.
மேலும் முறைகேடு நடைபெற்ற ஜார்க்கண்ட் அரசு தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து நேற்று பேரணியில் காயம்பட்ட தலைவர் தேவேந்திரநாத் மாதோவுடன் வீடியோ காலில் அபிஜித் தீப்கே பேசினார்.
இந்நிலையில் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவலநிலையைப் போக்கவும், அவற்றின் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் சிஜேபி சார்பில் ல் ஆகஸ்ட் 15 முதல் தேசிய அளவிலான பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது.
வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில், கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பஞ்சாயத்து தலைவர்களும்பெற்றோர்களும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அபிஜித் திப்கே கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவர் இதுகுறித்து தீப்கே தெரிவிக்கையில், "கடந்த 80 ஆண்டுகளாக கிராமப்புறப் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
புதிய நாடாளுமன்றக் கட்டடமும், பிரதமருக்கு புதிய இல்லமும் கட்ட முடிந்தது என்றால், கிராமப்புற விவசாயிகளின் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக புதிய பள்ளிகளைக் கட்ட முடியாதா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில் உள்ள அரசுப் பள்ளியைச் சீரமைக்க உள்ளூர் பஞ்சாயத்து தலைவரிடம் கோரிக்கை வைக்கப் போவதாகத் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளைச் சிறப்பாக மேம்படுத்தும் பஞ்சாயத்து தலைவர்களின் புகைப்படங்களை சிஜேபியின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு கௌரவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மின்சாரம், குடிநீர், கழிப்பறை மற்றும் சத்தான மதிய உணவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
வசதிகள் இல்லாத பட்சத்தில் வீடியோ பதிவு செய்து, சிஜேபி வழங்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து contact@cockroachjantaparty.org என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.