மீண்டும் கிழிந்த ஆர்எஸ்எஸ் முகமூடி.. அரசியலமைப்பை அகற்றி மனுஸ்மிருதியை அமல்படுத்த பாஜக சதி - ராகுல்

ஏழைகளின் உரிமைகளை பறித்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்துவதே அவர்களின் நோக்கம்.அவர்களை ஒருபோதும் வெற்றிபெற விடமாட்டோம்.
மீண்டும் கிழிந்த ஆர்எஸ்எஸ் முகமூடி.. அரசியலமைப்பை அகற்றி மனுஸ்மிருதியை அமல்படுத்த பாஜக சதி  - ராகுல்
Published on

அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' (socialist and secular) என்ற வார்த்தைகளை நீக்க ஆர்.எஸ்.எஸ்.பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே கூறியது சர்ச்சையை ஏற்ப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஆர்எஸ்எஸ்-இன் முகமூடி மீண்டும் கிழிந்துவிட்டது. அரசியலமைப்பு, சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் நீதி பற்றி பேசுவதால் அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு அரசியலமைப்பு வேண்டாம். அவர்களுக்கு மனுஸ்மிருதி வேண்டும். சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளின் உரிமைகளை பறித்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்துவதே அவர்களின் நோக்கம்.

அரசியலமைப்பு போன்ற ஒரு சக்திவாய்ந்த ஆயுதத்தை அவர்களிடமிருந்து பறிப்பதுதான் அவர்களின் உண்மையான சதித் திட்டம். ஆர்எஸ்எஸ் இந்த கனவை காண்பதை நிறுத்த வேண்டும். அவர்களை ஒருபோதும் வெற்றிபெற விடமாட்டோம்." என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com