தனது அமைச்சகத்திடம் இருந்தே 99 லட்சம் ரூபாய் மானியம் பெற்ற மத்திய அமைச்சர்: மறைக்க ஏதுமில்லை என தடாலடி..!

மத்திய அமைச்சர் ஒருவர் அவரது அமைச்சகத்திலேயே 99 லட்சம் ரூபாய் மானியம் பெற்றுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மத்திய அமைச்சர் பகீரத் சவுத்ரி
மத்திய அமைச்சர் பகீரத் சவுத்ரி
Published on

மத்திய வேளாண் துறையின் இணை அமைச்சராக இருப்பவர் பகீரத் சவுத்ரி. அஜ்மிர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டும் பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைத்ததும், அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

தற்போது, இவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் வணிக ரீதியிலான விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான மானியம் கேட்டு மத்திய வேளாண் அமைச்சகத்தை நாடியுள்ளார். அமைச்சகமும் அவருக்கு 99 லட்சத்து 60 ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது.

ஆனால், இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை என்று அமைச்சர் பகீரத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் பகீரத் சவுத்ரி கூறியிருப்பதாவது:-

நான் ஒரு விவசாயி. நான் சிறு வயதில் இருந்தே விவசாயம் செய்து வருகிறேன். நான் எதையும் மறைக்கவிலலை. ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாலிஹவுஸ்களை அமைத்து மானியங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆகவே, நானும் அவ்வாறு செய்தேன். 2018-ல் விண்ணப்பித்தேன். நான் இங்கு ஒரு அறிவிப்பு பலகை வைத்துள்ளேன். அதில் நான் வாங்கிய கடன்கள் மற்றும் மானியங்கனை குறிப்பிட்டுள்ளேன்.

விவசாயிகளுக்கு பயிற்சி

நான் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துள்ளேன். புதிய யுக்தி மற்றும் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளித்துள்ளேன். என்னுடைய இடத்திற்கு அனைத்து உள்ளூர் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டுள்ளனர். ஆகவே, மறைப்பதற்கு என்ன இருக்கிறது?

இவ்வாறு பகீரத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ஆனால் அமைச்சர் conflict of interest-ல் ஈடுபட்டுள்ளால் என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com