

இந்தியா முழுவதும் மொத்தம் 32 போலி பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளது. சேர்க்கைக்கு முன்பும், கட்டணம் செலுத்தும் முன்பும் நிறுவனத்தின் அங்கீகாரத்தை மாணவர்களும் பெற்றோரும் கட்டாயம் சரிபார்க்குமாறு யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
சட்டப்பூர்வமான அங்கிகாரம் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் அந்த நிறுவனம் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளதா அல்லது அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் என யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.
யுஜிசி சட்டம் 1956-ன் கீழ் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் வழங்கும் பட்டங்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்புக்குச் செல்லுபடியாகாது. அக்டோபர் 9, 2026 உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நவம்பர் 17, 2026 அன்று யுஜிசி இந்த பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தமுள்ள 32 போலி நிறுவனங்களில் 12 டெல்லியில் உள்ளன இது 2023-ல் இருந்த அதே 8 நிறுவனங்கள் இன்றும் தொடர்வதாக தெர்வித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் 4 போலிப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அதேப்போல்தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா 2 போலிப் பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் உள்ள சர்வ பாரதிய சிக்ஷா பீடம்' மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள 'நேஷனல் பேக்வார்ட் கிருஷி வித்யாபீடம்' ஆகியவை அங்கீகாரம் பெறாத போலியான் பல்கலைகழகம் என யுஜிசி சுட்டிக்காட்டியுள்ளது.
விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள் அல்லது சமூக ஊடகக் குழுக்களை மட்டும் நம்பாமல், சேர்க்கைக்கு முன் அங்கீகாரம், பட்டம் வழங்கும் அதிகாரம் மற்றும் தொலைதூர ஆன்லைன் கல்வி அனுமதிகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யுஜிசி சட்டவிதிகளை மீறும் இத்தகைய போலி கல்வி நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்து, அவற்றை மூடுவதற்குரிய கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.