

புதுடெல்லி:
இந்தியாவின் சில்லரை பணவீக்கம் கடந்த மே மாதம் 4.75 சதவீதமாக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 5.08 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசின் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
கிராமப்புறங்களில் 5.66 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 4.39 சதவீதமாகவும் சில்லரை பணவீக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 9.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 8.69 சதவீதமாக இருந்தது.
தொழில்துறை வளர்ச்சி கடந்த மே மாதத்தில் 5 சதவீதமாக இருந்தது தற்போது 5.9 சதவீதமாக உயர்ந்தள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.