கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு

அணையில் இருந்து வினாடிக்கு 1939 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கபினி அணையின் நீர்மட்டம் 74.85 அடியாக இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு
Published on

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3182 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1939 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 74.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 622 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 1991 கனஅடி திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 2239 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com