கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு

கபினி அணையின் நீர்மட்டம் 73.76 அடியாக இருந்தது. 1315 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1313 கனஅடியாக குறைந்தது.
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு
Published on

பெங்களூரு:

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 97.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1013 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 73.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 678 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து நேற்று 1315 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1313 கனஅடியாக குறைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com