கர்நாடகாவில் சேவையை வழங்க உரிமம் பெற்றது ராபிடோ!

முறையான ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் எங்கள் கேப் சேவைகளை வலுப்படுத்தும்.
Rapido
Published on

கர்நாடக மாநிலத்தில் கேப் (cab) சேவைகளை இயக்குவதற்கான உரிமத்தை 'ராபிடோ' நிறுவனம் கர்நாடக மாநிலப் போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

'கர்நாடக தேவைக்கேற்ற போக்குவரத்து தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் விதிகள், 2016'-இன் கீழ் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு (ஆகஸ்ட் 2031 வரை) செல்லுபடியாகும் இந்த உரிமம், மாநிலத்தின் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் ராபிடோ தனது கேப் சேவைகளை தொடர்ந்து இயக்க அனுமதிக்கிறது.

இந்நிறுவனம் கர்நாடகாவின் 21 நகரங்களில் தனது சேவையை வழங்கி வருகிறது. இதில் 3.14 லட்சத்திற்கும் அதிகமான 'கேப்டன்கள்' (ஓட்டுநர்கள்) மற்றும் 2.04 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

பாதுகாப்பான சேவை:

உரிமம் பெற்றது குறித்து ராபிடோ இணை நிறுவனர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் சேவையை வழங்க உரிமம் பெற்றதைத் தொடர்ந்து மாநில அரசு மற்றும் போக்குவரத்து துறையுடன் இணைந்து பணியாற்ற தங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் என தெரிவித்தார்.

இதுகுறித்த அறிக்கையில், "கர்நாடகா எங்கள் சொந்த மாநிலம் மற்றும் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாகும். இந்த முன்னேற்றம், முறையான ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் எங்கள் கேப் சேவைகளை வலுப்படுத்தும்.

இதுதவிர பயணிகளுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதியை வழங்க கர்நாடக அரசு மற்றும் போக்குவரத்து துறையுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றவும் எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது," என்று ராபிடோவின் இணை நிறுவனர் பவன் குண்டுபள்ளி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 69 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தங்கள் தளத்தின் மூலம் கேப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக ராபிடோ தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com