

பெங்களுரை சேர்ந்த இருதய நோய் மருத்து நிபுணரான ரமண ராவ், தொடர்ச்சியாக 53 ஆண்டுகள் இலவச மருத்துவ முகாம்களை நடத்தியதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களுரை அடுத்த நெலமங்கலா பகுதியில் கடந்த 1973 ஆம் ஆண்டு இலவச மருத்துவமனையை இருதய நோய் நிபுணரான மருத்துவர் ரமண ராவ் தொடங்கினார்.
இந்த மருத்துவமனையில் இருதயவியல், கண் சிகிச்சை, தோல் மற்றும் பல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு துறைகளில் சுமார் 35 தன்னார்வ நிபுணர்கள் கொண்ட குழுவின் ஆதரவுடன், நோயாளிகளுக்கு இலவச சிகிச்சைகள், நோய் கண்டறிதல் சோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மருத்துவர் ராவ் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.
இதன் மூலம், தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச சிகிச்சை அளித்து தற்போது கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
மருத்துவர் ராவிடம் சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நவம்பர் 15 அன்று நெலமங்களாவில் நடைபெற்ற நிகழ்வில், மருத்துவர் ராவின் நீண்டகால சேவையை பாராட்டி கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கர்நாடகா துணை முதலமைச்சர் பரமேஸ்வரா கலந்துகொண்டு, கிராமப்புர சுகாதாரத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த மருத்துவர் ராவை பாராட்டினார்.