நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.ரெயில் நிலையங்களில் உள்ள 9000 திரைகளில் கும்பாபிஷேக நிகழ்வு.
நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு
Published on

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியாவில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள் வண்ண விளக்குகளால் ஒளிரும் என ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்த்துள்ளது.

அதாவது, நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் உள்ள 9000 திரைகளில் கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com