அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிக்க ஆயுத படைகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளன: ராஜ்நாத் சிங்

நமது பாதுகாப்பு படைகள் தகுந்த பதிலடியை கொடுக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
Rajnath Singh
Published on

எதிரிகளின் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிப்பதற்கான "சுதந்திரமும் வளங்களும்" இந்திய ஆயுத படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா அமைதியை விரும்புவதாகவும், போரையோ அல்லது எந்தவொரு நாட்டின் நிலப்பகுதியையும் ஆக்கிரமிப்பதையோ அது விரும்பவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

இருப்பினும், அமைதிக்கும் பலவீனத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது:

"போர் குறித்த அச்சத்தால் ஏற்படும் அமைதி கண்டிக்கத்தக்கது; அதேவேளையில், அமைதிக்காக நடத்தப்படும் போர் போற்றுதலுக்குரியது. இந்தியாவுக்கு எதிராக ஏதேனும் ஒரு நாடு பயங்கரவாதத்தை ஊக்குவித்தால், பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது; மாறாக, நமது பாதுகாப்பு படைகள் தகுந்த பதிலடியை கொடுக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்," என்று அவர் கூறினார்.

எதிரிகளின் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்க்கமாக பதிலளிக்க ஆயுத படைகளுக்கு சுதந்திரமும் வளங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலிலும், இந்தியா தனது சுயமான முடிவெடுக்கும் திறன் மற்றும் மூலோபாய சுதந்திரத்துடன் முன்னேறி வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது உரையில் வலியுறுத்தினார்.

பாதுகாப்பை எதிரிகள் முயற்சி:

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லுதல், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தல், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்புதல் மற்றும் சமூகத்தில் பிளவுகளை உருவாக்க முயற்சித்தல் உள்ளிட்ட அனைத்து தீய வழிகளிலும் இந்தியாவின் பாதுகாப்பை குலைக்க எதிரிகள் முயற்சித்ததாக சிங் கூறினார்.

தவறான பாதையில் சென்ற இளைஞர்களை மீண்டும் நல்வழிக்கு கொண்டு வருதல், மறுவாழ்வு மற்றும் தீவிரவாத சிந்தனைகளை அகற்றும் முயற்சிகளை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், இத்தகைய தீய திட்டங்களை முறியடித்து அனைத்து முனைகளிலும் அரசு பதிலடி கொடுத்துள்ளது என்று அவர் உறுதியாகக் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com