

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 82வது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 20).
ராஜீவ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் அவரின் மனைவி சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இந்தியர்களிடையே நல்லிணக்கம், ஒவ்வொரு இதயத்திலும் கருணை, ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி மற்றும் ஜனநாயகத்தில் சமமான உரிமைகள்...
அப்பா, உங்களின் போதனைகளே எனது பலம். உங்களின் நினைவுகளே எனது தைரியம். நீங்கள் கண்ட இந்தியாவின் கனவை நனவாக்கும் எனது உறுதிப்பாடு எப்போதும் என்னை வழிநடத்தும்." என தெரிவித்துள்ளார்.