

ராகுல் காந்தியின் கான்வாய் வாகனங்கள் ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் கான்வாய் வாகனங்கள் ஒன்றொன்றும் ஆம்புலன்ஸ் மீதும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக தான் தெரிவித்த கருத்துகள் தொடர்பான அவதூறு வழக்கின் விசாரணைக்காக ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.
லக்னோவிலிருந்து சுல்தான்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த ராகுலின் வாகன அணிவகுப்பில் பின்னால் வந்த 5 கான்வாய் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. மேலும் ஒரு ஆம்புலன்ஸ் மீதும் கான்வாய் வாகனம் மோதியுள்ளது.
இதில் முன்னே சென்ற ராகுல் காந்தியின் வாகனத்திற்கு எதுவும் ஆகவில்லை. அவர் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்தவர்கள் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் மற்றும் காயமடைந்தவர்களின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.