கல்வி என்பது சலுகையல்ல, ஒவ்வொரு மாணவரின் உரிமை - ராகுல் காந்தி

ஒவ்வொரு மாணவருக்கும் கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் கல்விக்கு உகந்த சூழலில் படிப்பதற்கான உரிமை உண்டு.
Rahul Gandhi with Students
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் நகருக்கு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பழங்குடியின மாணவர் குழுவொன்றை சந்தித்து பேசினார். இக்குழுவில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களும் அடங்குவர்.

அப்போது பேசிய அவர், கல்வி என்பது ஒரு சலுகை அல்ல, மாறாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் உரிமை என்று குறிப்பிட்டார். மேலும், விளிம்புநிலை சமூகங்களைசேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்பட கூடாது என்றும் அவர் கூறினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ஒவ்வொரு மாணவருக்கும் கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் கல்விக்கு உகந்த சூழலில் படிப்பதற்கான உரிமை உண்டு என்று கூறினார்.

எக்ஸ் தள பதிவு:

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "இன்று மகாராஷ்டிராவின் நாசிக்கில், பழங்குடியின மாணவர் குழுவொன்றை சந்தித்தேன்; இதில் தங்கள் கோரிக்கைகளுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களும் அடங்குவர். அவர்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் நான் கவனமாகக் கேட்டறிந்தேன்.

விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்பட கூடாது; அவர்களுக்கு அமைப்பின் ஆதரவும் சாத்தியமான அனைத்து உதவிகளும் தேவை," என்று காந்தி குறிப்பிட்டார்.

கல்வி ஒவ்வொரு மாணவரின் உரிமை:

கல்வி என்பது சலுகையல்ல; அது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் உரிமை என்றும் அவர் மேலும் கூறினார்.

பழங்குடியினருக்கான ஆசிரம பள்ளிகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று (புதன்கிழமைய) நாசிக்கில் இருந்த ராகுல் காந்தி, மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ​​கட்சியின் கொள்கைகளில் உறுதியாக நிற்கவும், மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் அவர்களை வலியுறுத்தினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com