ரூ.13 லட்சம் வேலையைத் துறந்து ஏ.ஐ படிப்பு; அமெரிக்காவில் ரூ.1.5 கோடி சம்பளத்தில் சாதனை படைத்த ஐ.ஐ.டி பட்டதாரி!

இவர் அமெரிக்காவிலுள்ள 'யுனிவர்சிட்டி அட் பஃப்பலோ' பல்கலைக்கழகத்தில் AI பாடப்பிரிவில் எம்.எஸ் பட்டம் பயின்றார்.
Software Engineer  Aditya
Published on

ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்ற சாய் வெங்கட ஆதித்யா அரேபல்லி, அமெரிக்காவில் உள்ள அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளத்தில் மென்பொறியாளராகப் (Software Engineer) பணியில் சேர்ந்து அசத்தியுள்ளார்.

தொடக்கக் கல்வி

2022-இல் ஐ.ஐ.டி தார்வாடில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.டெக் முடித்த ஆதித்யா, பெங்களூரில் உள்ள 'ரிவர்பெட் டெக்னாலஜி' நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தார்.

ஏ.ஐ துறையை நோக்கிய மாற்றம்

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சியைக் கண்டு, தனது நிலையான வேலையைத் துறந்து அமெரிக்காவிலுள்ள 'யுனிவர்சிட்டி அட் பஃப்பலோ' பல்கலைக்கழகத்தில் AI பாடப்பிரிவில் எம்.எஸ் பட்டம் பயின்றார்.

பயிற்சியும் வெற்றியும்

மேல்படிப்பின் போது கோடிங், தயாரிப்புகள் உருவாக்கம் மற்றும் சான்றிதழ் பயிற்சிகளில் கவனம் செலுத்திய இவர், படிப்பை முடித்ததும் சீட்டிலில் உள்ள அமேசான் AWS கிளையில் ரூ.1.5 கோடி பேக்கேஜில் வேலை வாய்ப்பைப் பெற்றார்.

குடும்பப் பின்னணி

ஒரு புகைப்படக் கலைஞரின் மகனான ஆதித்யாவின் இந்த மகத்தான வெற்றி குறித்து அவரது தந்தை நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "ஒரு புகைப்படக் கலைஞராக எனது மகனுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்; இன்று என் மகன் என் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டான்" எனக் கூறியுள்ளார். துணிச்சலாக வேலையை விட்டுவிட்டு புதிய தொழில்நுட்பத்தைக் கற்ற ஆதித்யாவின் இந்த சாதனை பயணம் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com