பாலியல் வழக்கை மறைக்க ரூ.5 கோடி லஞ்சம்.. தன் மீது குற்றம்சுமத்திய முன்னாள் நீதிபதிக்கு பஞ்சாப் முதலமைச்சரின் மனைவி நோட்டீஸ்

காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைராவின் மைத்துனரே ரஞ்சித் சிங் ஆவார்.
பஞ்சாப் முதலமைச்சர், மனைவி
பஞ்சாப் முதலமைச்சர், மனைவி
Published on

பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை மூடி மறைப்பதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் மனைவி குர்ப்ரீத் கவுர் ரூ. 5 கோடி லஞ்சம் கேட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சித் சிங் என்பவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஞ்சித் சிங்கிற்கு குர்ப்ரீத் கவுர் சட்டப்பூர்வ நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.

நோட்டீஸ்

நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் அவர் பதில் அளிக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்கத் தவறினால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும், சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைராவின் மைத்துனரே ரஞ்சித் சிங் ஆவார். எனவே அவரின் இந்த குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என ஆளும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்

முன்னதாக, இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்து, பஞ்சாப் மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் குர்ப்ரீத் கவுர், தன் மீது குற்றம்சாட்டிய முன்னாள் நீதிபதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com