

புதுச்சேரி:
புதுச்சேரியில் கடற்கரை, ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது புதுச்சேரி ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மதுவிற்பனை செய்வதற்கு கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. பிற மதுக்கடைகளில் இரவு 11 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் தற்போது வரை 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக்கூறி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.