

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாளை முதல் (அக்.2) நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.
தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என, கடந்த வாரம் கெடு விதித்திருந்த நிலையில், இன்று மீண்டும் போராட்ட அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர் பதவி விலகாத பட்சத்தில், காந்தி ஜெயந்தியான நாளை மும்பையில் போராட்டம் தொடங்கும் என்றும், அதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடையும் என்றும் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.