

'கோமாதா'வை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், துறவிகளை அவமதிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக முதல் முறையாக அங்கு ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அங்கு பேசிய அவர், மேற்கு வங்கத்தில் நிலைமை மாறிவிட்டதாகவும், மக்கள் இப்போது அச்சமின்றி பகவத் கீதையைப் பாராயணம் செய்யலாம் என்றும் கூறினார். ப
பகவத் கீதை மற்றும் அனுமன் சாலிசாவைத் தயக்கமின்றிப் பாராயணம் செய்து பரப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"நாம் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கலாம் மற்றும் சங்கு ஊதலாம். இதைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை என்றும், மாநிலத்தில் இப்போது 'மாற்றத்தின் காற்று' வீசுகிறது" என்றும் சுவேந்து அதிகாரி மேலும் கூறினார்.
"திலகம், வேட்டி மற்றும் துளசி அரசு வந்துவிட்டது. இதுவே 'கோமாதா'வைப் பாதுகாக்கும் அரசு" என்று அவர் கூறினார்.
'கோமாதா' பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், துறவிகளை அவமதிப்பவர்களை தனது அரசு சிறையில் அடைக்கும் என்றும் கூறினார்.
நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு விழிப்புடன் நிற்க வேண்டும் என்றும் சுவேந்து அதிகாரி வலியுறுத்தினார்.