சமூகமும் அரசும் முழுமையாக தோற்றுவிட்டது.. டெல்லி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - கொலை குறித்து பிரியங்கா காட்டம்

சிறுமியின் இடது கரத்தில் இருந்த 3 நட்சத்திரம் பொறித்த டாட்டூவை வைத்து போலீசார் சிறுமியை அடையாளம் கண்டனர்.
பிரியங்கா
பிரியங்கா
Published on
Summary

டெல்லியில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் மைனர் சிறுவர்கள் மூவர் மற்றும் அவர்களின் 19 வயது நண்பன் கைது செய்ப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 6 முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் சடலம் 2 நாட்கள் கழித்து ஸ்வரூப் நகரில் Kushak சாலையில் திறந்த வெளியில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சிறுமியின் உடல் அழுகிய நிலையில் நாய்கள் குதறிய நிலையில் இருந்தது. சிறுமியின் இடது கரத்தில் இருந்த 3 நட்சத்திரம் பொறித்த டாட்டூவை வைத்து போலீசார் சிறுமியை அடையாளம் கண்டனர்.

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

சிறுமி செப்டம்பர் 10 ஆம் தேதியே காணாமல் போயிருந்தபோதும் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவில்லை. போலீசார் தாமாக முன்வந்து செய்த விசாரணையில் 50 சிசிடிவி கேமராக்கள் ஆராயப்பட்டு சரக்கு வண்டியில் வந்து அந்த இடத்தில் உடல் போடப்படத்தை கண்டறிந்தனர்.

அந்த வாகனத்தின் நம்பர் பிளேட் ஐ வைத்து அதன் உரிமையாரை அடையாளம் கண்டனர். அந்த நபர் தனது 17 வயது தம்பி தன் வாகனத்தை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார். அந்த சிறுவனை விசாரித்தபோது அவன் உண்மையை ஒப்புக்கொண்டு மற்ற மூவரின் பெயர்களையும் கூறியுள்ளான். நால்வரும் சிறுமிக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் ஆவர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் சிறுமி, போலீசில் புகார் அளிக்கப் போவதாக மிரட்டியதால் பயந்து சிறுமியை ஏற்கனவே அவர்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொன்றதாக சிறுவனை வாக்கு மூலம் அளித்துள்ளான். மேலும் சிறுமி தன்னை திருமணம் செய்ய விரும்பியதாகவும் ஆனால் அதற்கு தான் சம்மதிக்கவில்லை என்றும் சிறுவன் கூறியுள்ளான்.

வழக்கு

வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார் 19 வயது இளைஞரை நீதிமன்ற காவலிலும், 16, 17 வயது நிரம்பிய 3 சிறுவர்களை சிறார் கூர்நோக்கு மையத்திலும் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் 3 சிறுவர்களையும் வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்தப்படும் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. அவர்களின் பள்ளிச் சான்றிதழ் மூலம் மைனர்கள் என வரையறுக்கப்பட்டபோதும் அவர்களின் வயதை நிர்ணயிக்க bone ossification டெஸ்ட் நடந்த போலீஸ் திட்டமிட்டுள்ளது.

மூவரையும் வயது வந்தவர்களாக கருதி விசாரிக்க, டெல்லி நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் இன்னும் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா கண்டன்ம்

இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"டெல்லியில் 17 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் அனைத்து எல்லைகளும் மீறப்பட்டுள்ளது. சில நாட்கள் முன்னர் தான் மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை. பெண்கள் முன்னேற்றம் பற்றிய வேற்று பேச்சுக்கள் தான் இருக்கிறது.

நூற்றுக்கணக்கான பெண்கள் தின்தோறும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் குற்றவாளிகள் மீது எந்தவித தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை கூட அவர்களுக்கு ஏற்படவில்லை. எப்ஐஆர்கள் கூட பதியப்படுவதில்லை. சமூகமும் அரசாங்கமும் பெண்களுக்கு பாதுகாப்பு, சுதந்திரம், சமத்துவத்துக்குக்கான உரிமையை வழங்குவதில் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com