சாமானிய மக்கள் பயன் பெறும் வகையில் பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார் - அமித் ஷா புகழாரம்

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னரே ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
Published on

புதுடெல்லியில் நடைபெற்ற நல்லாட்சி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேசியதாவது:

மத்தியில் நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் நீண்ட காலம்  காத்திருந்தனர். அதை பிரதமர் மோடி அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக வழங்கி வருகிறது.

நீண்ட காலத்திற்கு முன்பே நாங்கள் சுதந்திரம் பெற்று விட்டோம், ஆனால் நல்லாட்சி எப்போது கிடைக்கும், என்று மக்கள் கூறினர்.  நல்லாட்சி இல்லாததால், நாட்டின் ஜனநாயக அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை படிப்படியாக குறைந்தது. ஆனால், பிரதமர் மோடி நல்லாட்சியை அடிமட்டம் வரை கொண்டு சென்றதன் மூலம், ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நல்ல நிர்வாகத்தை கொடுத்து வருவதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர்.  இது இந்தியாவின் முகத்தையே மாற்றி விட்டது.

2014ம் ஆண்டுக்கு முன்னர் பல ஆட்சிகள் மாறின. பல அரசுகள் வந்தன. பல சென்றன. ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சியை நடத்த மட்டும் வரவில்லை. நாட்டை மாற்றி அமைக்க வந்துள்ளார் என்று மக்கள் நினைக்கின்றனர். இதற்கு முன்னர் ஆண்ட அரசுகள் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே செயல்பட்டன.  இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com