மகத்தான சாதனை..! கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் பிரக்ஞானந்தா.
மகத்தான சாதனை..! கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

ஆஸ்லோ நகரில் நடந்த 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை தோற்கடித்து நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.

இந்நிலையில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்த மகத்தான சாதனைக்காக பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துகள்!

இது உண்மையிலேயே அவரது தொடர்ச்சியான சிறப்பை எடுத்துக்காட்டும் ஒரு அற்புதமான மைல்கல்.

அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com