யஷ்வந்த் சின்காவுக்கு ஒவைசி கட்சி ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் மஜ்லிஸ் கட்சி வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிப்பார்கள்.மஜ்லிஸ் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
யஷ்வந்த் சின்காவுக்கு ஒவைசி கட்சி ஆதரவு
Published on

புதுடெல்லி:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒவைசி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஜனாதிபதி தேர்தலில் மஜ்லிஸ் கட்சி வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிப்பார்கள். யஷ்வந்த் என்னுடன் தொலைபேசியில் பேசினார்' என்று கூறியுள்ளார்.

மஜ்லிஸ் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அவர்கள் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com