கர்ப்பம்... திருமணம் செய்ய வற்புறுத்திய இன்ஸ்டா பிரபலம்- கொலை செய்து புதைத்த காதலன்

இருவருக்கும் இடையை அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி காதலன் சஞ்சு மற்றும் அவரும் உதவி ஒருவரை கைது செய்துள்ளனர்.
கர்ப்பம்... திருமணம் செய்ய வற்புறுத்திய இன்ஸ்டா பிரபலம்- கொலை செய்து புதைத்த காதலன்
Published on

டெல்லயில் கர்ப்பமாக இருந்த இளம்பெண்ணை அவரது காதலன் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

19 வயதான சோனி இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்தார். அவருக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் மற்றும் காதலன் சஞ்சு ஆகியோர் சேர்ந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், சோனி 7 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் அதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காதலனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சஞ்சுவோ திருமணம் செய்துகொள்ள தயாராக இல்லை என்றும் குழந்தையை கருக்கலைப்பு செய்துவிடலாம் எனவும் கூறி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையை அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சோனியை கொலை செய்ய முடிவு செய்த சஞ்சு, கடந்த திங்கட்கிழமை சோனியை அரியானாவின் ரோஹ்தக் நகருக்கு அழைத்து சென்று கொன்று புதைத்துள்ளார். அவருக்கு நண்பர்கள் இரண்டு பேர் உதவி செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி காதலன் சஞ்சு மற்றும் அவரும் உதவி ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com