மானிய விலையில் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர் எண்ணிக்கை ஆண்டுக்கு 8-இல் இருந்து 4 ஆக குறைப்பு

இலவச எரிவாயு இணைப்போடு, ஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தன.
மானிய விலையில் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர் எண்ணிக்கை ஆண்டுக்கு 8-இல் இருந்து 4 ஆக குறைப்பு
Published on

கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு தொடங்கிய திட்டம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY).

இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்போடு, ஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தன.

கடந்த ஆண்டு இந்த சிலிண்டர்களின் எண்ணிக்கை 12-லிருந்து 9 ஆகக் குறைக்கப்பட்டது.

தற்போது இந்த எண்ணிக்கையை மேலும் பாதியாகக் குறைத்து, ஆண்டுக்கு வெறும் 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

குடும்பங்களின் சராசரி எரிபொருள் நுகர்வு அளவைக் கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இதனால் ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படும் பட்சத்தில், உஜ்வாலா பயனாளிகளும் சந்தை விலையிலேயே கூடுதல் சிலிண்டர்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது ஏழைக் குடும்பங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையாக அமைந்துள்ளது.

வளைகுடா போர் சூழலால் எல்பிஜி இறக்குமதி பெருமளவு முடங்கியுள்ளதால் வணிக உபயோக சிலிண்டர் விலை கணிசமான உயர்ந்த நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com