காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு திருப்தி இல்லை: அதான் முதல்வர் மாற்றம்- பிரதமர் மோடி

இன்று நாட்டில் சுயசார்பு இந்தியா முன்னெடுப்பைத் தொடர்ந்து கேலி செய்யும் சில எதிர்மறைச் சிந்தனையாளர்கள் உள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு திருப்தி இல்லை: அதான் முதல்வர் மாற்றம்- பிரதமர் மோடி
Published on

பிரதமர் மோடி குஜராத் மாநிலம் சூரத்தில் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இன்று நாட்டில் சுயசார்பு இந்தியா முன்னெடுப்பைத் தொடர்ந்து கேலி செய்யும் சில எதிர்மறைச் சிந்தனையாளர்கள் உள்ளனர். அவர்கள் இந்த தேசிய உறுதிப்பாட்டை தொடர்ந்து குறைத்து மதிப்பிடுகின்றனர். இந்தியாவை எப்போதும் பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையிலேயே வைத்திருந்த அதே நபர்கள்தான் இவர்கள்.

மற்றவர்களை சார்ந்திருக்கும் ஒரு நாடு, தான் உண்மையில் அடைய தகுதியான வளர்ச்சி நிலையை ஒருபோதும் எட்ட முடியாது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

ஒருபுறம், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை நாங்கள் உறுதி செய்தோம். மறுபுறம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க அளவுகளுக்கு உயர்த்தினோம்.

கடந்த 12 ஆண்டுகளாக குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் பரப்பி காங்கிரஸ் கட்சி வாய்ப்புகளைத் தேடி வந்தாலும், மக்கள் அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதனால்தான் (கர்நாடகாவில்) அவர்கள் முதலமைச்சரை மாற்றினார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com