லட்சத்தீவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள் வைரல்

பிரதமர் மோடி புகைப்படங்களுடன் பதிவுகளும் வெளியிட்டுள்ளார்.தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
லட்சத்தீவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள் வைரல்
Published on

திருச்சி பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி கடந்த 2ம் தேதி லட்சத்தீவு சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பின்னர், நாடு திரும்பிய பிரதமர் மோடி லட்சத்தீவில் தான் அனுபவித்த அழகிய தருணங்கள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். 

மேலும், பிரதமர் மோடி புகைப்படங்களுடன் பதிவுகளும் வெளியிட்டுள்ளார்.

அதில் பிரதமர் மோடி," சமீபத்தில், லட்சத்தீவு மக்கள் மத்தியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன்.

அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

அழகிய கடற்கரைகளில் அந்த அதிகாலை நடைப்பயணங்களும் தூய பேரின்பத்தின் தருணங்களாக இருந்தன.." என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், "ஒருவருக்குள் உள்ள சாகச வீரரை வெளிக்கொள்ள விரும்புவோர், உங்கள் பட்டியலில் லட்சத்தீவு இருக்க வேண்டும். 

அங்கு தங்கியிருந்தபோது, நானும் ஸ்நோர்கெல்லிங் முயற்சித்தேன் - அது என்ன ஒரு உற்சாகமான அனுபவம்!

இவ்வாறு அவர் தனித்தனி பதிவாக குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com