பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

குரல் வாக்கெடுப்பில் போதிய ஆதரவு இல்லாததால் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம் நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிரான தீர்மானம்.
பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
Published on

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்நிலையில், பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசு வெற்றிப்பெற்றுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு செய்தன.

மக்களவையில் நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் போதிய ஆதரவு இல்லாததால் தீர்மானம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com