

2026 காமன்வெல்த் போட்டிகளில் வென்று நாடு திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 9) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வீரர் வீராங்கனைகளை நேரில் வரவேற்ற பிரதமர் மோடி, அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தார்.
இந்தச் சந்திப்பின் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மோடி பகிர்ந்துள்ளார்.
வீடியோவில், செல்பி கேமராவைப் பிடித்திருக்கும், தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி சவுத்ரி, பிரதமரை சில வார்த்தைகள் பேசுமாறு கோருகிறார்.
அதற்குப் புன்னகையுடன் பதிலளித்த பிரதமர் மோடி, "Jo Khelega, Wo Khilega" (விளையாடுபவர் எவரோ, அவரே பிரகாசிப்பார்). Always Cheer For Bharat, பாரத மாதா கி ஜே! என்று கூறுவது இடம்பெற்றுள்ளது.
காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்ற2026 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது.
39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கும்.
இம்முறை இந்தியாவின் வெற்றியில் குத்துச்சண்டை மிக முக்கியப் பங்கு வகித்தது.
குத்துச்சண்டையில் மட்டும் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி உட்பட 10 பதக்கங்களை ள்ளிக் குவித்து வரலாற்று சாதனை படைத்தது.
சாக்ஷி சவுத்ரி, பிரீதி பவார், ஜாஸ்மின் லம்போரியா உள்ளிட்டோர் தங்கன் வெல்ல, லவ்லினா போர்கோஹெய்ன் உள்ளிட்டோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
காமன்வெல்த் வரலாற்றில் ஒரே தொடரில் ஒரு நாடு குத்துச்சண்டையில் வென்ற அதிகபட்ச தங்கப் பதக்கம் இதுவே ஆகும்.