2026 காமன்வெல்த் போட்டிகள் நிறைவு.. கவனிக்கத்தக்க சாதனைகள்

அதில் மட்டுமே ஆண்கள், பெண்கள் பிரிவை சேர்த்து இந்தியா 7 தங்க பதக்கங்களை கொண்டுள்ளது.
2026 காமன்வெல்த்  போட்டிகள்
2026 காமன்வெல்த் போட்டிகள்
Published on

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக நடைபெற்று வந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன.

இசை நிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் கொடி இறக்கப்பட்டு, போட்டிகள் முடிவுக்கு வந்தன.

பட்டியல்

இந்தியாவின் 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் அடங்கும்.

13 தங்கம், ஒன்பது வெள்ளி உட்பட 39 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 5வது இடத்தில் உள்ளது.

68 தங்கம், 41 வெள்ளி மற்றும் 54 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 163 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதலித்தில் உள்ளது.

26 தங்கம், 43 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 105 பதக்கங்களைப் பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடம் பிடித்தது.

18 தங்கம், 20 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 59 பதக்கங்களை அடைந்து மூன்றாம் கனடா இடத்தில் உள்ளது.

தொடரின் நாயகர்கள்

34 வயதான சத் லே குளோஸ் தென் ஆப்பிரிக்க நீச்சல் வீரர் சத் லே குளோஸ் இத்தொடரில் 3 பதக்கங்களை வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் தொடர்களில் இவர் வென்ற பதக்கங்களில் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. காமன்வெல்த் வரலாற்றிலேயே அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.

போட்டியில் வேல்ஸ் நாட்டின் டிராக் சைக்கிளிங் வீராங்கனை எம்மா பினுக்கேன் ஒரே காமன்வெல்த் தொடரில் 4 தங்கப் பதக்கங்களை வென்று ஒரே தொடரில் 4 தங்கம் வென்ற முதல் சைக்கிளிங் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

இந்திய சாதனை

10 விளையாட்டுகள் மட்டுமே இடம்பெற்ற இத்தொடரில், இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

இந்தியாவிற்கு அதிக பதக்கங்களை அள்ளிக் கொடுத்த விளையாட்டாகக் குத்துச்சண்டை அமைந்தது. அதில் மட்டுமே ஆண்கள், பெண்கள் பிரிவை சேர்த்து இந்தியா 7 தங்க பதக்கங்களை கொண்டுள்ளது.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் லவ்லினா, ஜாஸ்மின் லம்போரியா, பிரியா கங்காஸ், பிரீத்தி பவார், சாக்ஷி சவுத்ரி, அருந்ததி சவுத்ரி  (இடமிருந்து வலம்)
இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் லவ்லினா, ஜாஸ்மின் லம்போரியா, பிரியா கங்காஸ், பிரீத்தி பவார், சாக்ஷி சவுத்ரி, அருந்ததி சவுத்ரி (இடமிருந்து வலம்)

இளம் வீரர்கள் வருகை

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தவிர்த்து, தேஜஸ்வின் சங்கர், யாஷ்வீர் சிங் மற்றும் பல இளம் வீரர்கள் தடகளப் பிரிவில் பதக்கங்களை வென்றுள்ளனர்.

ஜூடோ, பளுதூக்குதல் மற்றும் குத்துச்சண்டையில் இளம் வீரர்கள் பதக்கங்களை வென்று எதிர்கால நம்பிக்கையை விதைத்துள்ளனர்.

அடுத்த இலக்கு

காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்திய வீரர்களின் அடுத்தகட்ட இலக்கு ஜப்பானில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.

சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற வல்லரசுகள் பங்கேற்பதால் அங்குப் போட்டி கடுமையாக இருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com