என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மாலத்தீவு அதிபர்
- மாலத்தீவு அதிபர் தேர்தலில் 53 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வென்றார்.
- பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு மாலத்தீவு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் யாருக்கும், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் தேர்தல் நடந்தது.
இதில் 53 சதவீத ஓட்டுகள் பெற்று மூயிஸ் வென்றதாக கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சோலிஹ் 46 சதவீத ஓட்டுகளைப் பெற்றார்.
இந்நிலையில், வரும் 17-ம் தேதி மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்க உள்ளார். இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், மாலத்தீவு அதிபரின் அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்க செல்வாரா அல்லது அவரது சார்பில் பிரதிநிதி செல்வாரா என்பது ஓரிரு நாளில் மாலத்தீவின் புதிய அரசுக்கு தெரிவிக்கப்படும் என கூறினார்.